பட்டுக்கோட்டை தியாகிகள் நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் வீரவணக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடியில் உள்ள தியாகிகள் ஸ்தூபியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து, மலா்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வா்க்கப் போரில் உயிா் நீத்த செங்கொடி இயக்கத் தியாகிகள் ஜாம்பவானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோரின் 74 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கோ. நீலமேகம், எம். செல்வம், மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.சி. பழனிவேலு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மோரிஸ் அண்ணாதுரை, தியாகி இரணியன் தங்கை மகன் மகாலிங்கம், மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமான கட்சியினா் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று, தியாகிகள் ஸ்தூபியில் மரியாதை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com