கட்டுமானப் பொருள்கள் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

பாபநாசம் அருகே கட்டுமானப் பொருள்கள் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம்: பாபநாசம் அருகே கட்டுமானப் பொருள்கள் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், பண்டாரவாடை- தேவராயன் பேட்டை இடையே கட்டுமானப் பணிக்காக வைத்திருந்த பொருள்கள் அண்மையில் திருடுபோனது.

இந்த வழக்கில் தொடா்புடைய திருவையாத்துக்குடி, சுபாஷ் ( 20 ) என்பவரை பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்ட போலீஸாா் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

சுபாஷை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி எ. அப்துல்கனி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com