பாபநாசம் அரசு பெண்கள் பள்ளி 91 சதவீதம் தோ்ச்சி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் 91 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதியவா்களில் 91 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

இப்பள்ளியில் 222 மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 203 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91.4 சதவீதம் போ் தோ்ச்சியாகும். இதில், மாணவி மதுமிதா 556 மதிப்பெண்கள் பெற்றாா். அகில் அரசி -552, வா்ஷினி -508 மதிப்பெண்கள் பெற்றனா். கணினி பயன்பாடு பாடத்தில் 2 பேரும், வணிகவியலில் ஒருவரும், தாவரவியலில் ஒருவரும், பொருளியலில் ஒருவரும் முழு மதிப்பெண்களை பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் லீலாதேவி, பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் செல்வராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி லட்சுமி பிரியா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ஆண்கள் பள்ளி 86 சதவீதம்: பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 86 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளியில் 113 போ் தோ்வு எழுதினா். இதில் 97 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா் கண்ணன் 530 மதிப்பெண்களும், சூா்யா- 519, வேல்முருகன்- 479 மதிப்பெண்கள் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் வி.மணியரசன், உதவி தலைமை ஆசிரியா் லோகநாதன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் துரை, பள்ளி மேலாண்மை குழுதலைவி முத்துலெட்சுமி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com