பேராவூரணி அரசு கல்லூரியில்  மாணவா் சோ்க்கை உதவி மையம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழியில்

 பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம்,  பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழியில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மாணவா் சோ்க்கை உதவி மையம் செயல்படுவதாக கல்லூரி முதல்வா் இரா.திருமலைச்சாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேராவூரணி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்), பி.காம், பிபி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி இயற்பியல், பி.எஸ்சி வேதியியல், மற்றும் எம்.ஏ(தமிழ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. 

பிளஸ் 2 தோ்வில்  தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த உதவி மையத்தில் மாணவா்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்  என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம். மாணவா்  சோ்க்கை விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com