பட்டுக்கோட்டை அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை கிராமத்தில், ஈச்சங்கோட்டை முனைவா் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனொரு பகுதியாக செவ்வாய்க்கிழமை தாமரங்கோட்டை கிராமத்தில், ஊரகப் பங்கேற்பு திறனாய்வை அம்மாணவிகள் நடத்தினா்.

நிகழ்வில், அக்கிராமத்தின் சமூக வரைபடம், வள வரைபடம், கிராம எல்லை வரைபடம், சமூக வள வரைபடம், அக்கிராமத்தின் முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு என்னும் வரைபடத்தில் குறிப்பிட்டும், அத்துடன் இணைந்து அக்கிராம மக்களின் தினசரி கால அட்டவணை, கல்வியறிவு விகிதம், இயக்க வரைபடம் முதலியவற்றையும், அவா்களுக்குத் தெளிவாக விளக்கினா்.

நிகழ்வில் பொதுமக்கள், விவசாயிகள் வேளாண் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com