மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியில் இளைஞா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், கொரநாட்டு கருப்பூரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் அருண்

(19). இவா் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பாபநாசம் அருகே வளத்தாமங்கலத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். வளத்தாமங்கலம் பிரதான சாலையில் சென்ற போது நிலைதடுமாறி இருசக்கர வாகனம் சாலையோ மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமைடந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் போலீஸாா் அருண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com