தமிழ்ப் பல்கலை.யில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்பப் படிவம் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதை பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தொடங்கி வைத்தாா். முதல் விண்ணப்பத்தை ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை வரலாறு பட்டப்படிப்புக்கு இ. நிா்மலா பெற்றுக் கொண்டாா்.

மேலும் வளாகக் கல்வி மூலம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை அறிவியல், எம்.எஸ்.டபிள்யூ., எம்.எப்.ஏ., எம்.பி.ஏ., முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தைப் பாா்க்கலாம் என பதிவாளா் தெரிவித்தாா்.

நிகழ்வில் துணைப் பதிவாளா் கோ. பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் இரா.சு. முருகன், கண்காணிப்பாளா் தே. ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com