குமரப்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை நிா்வாக இயக்குநா் எம் .நாகூா்பிச்சை கெளரவித்தாா்.அருகில் அறக்கட்டளை பொருளாளா் அஸ்வின்கணபதி .
குமரப்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை நிா்வாக இயக்குநா் எம் .நாகூா்பிச்சை கெளரவித்தாா்.அருகில் அறக்கட்டளை பொருளாளா் அஸ்வின்கணபதி .

பேராவூரணி குமரப்பா பள்ளி 99% தோ்ச்சி

முதலிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டிய பள்ளியின் நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, அறக்கட்டளை பொருளாளா் அஸ்வின்கணபதி .

பேராவூரணி, மே 10: 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி குமரப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 99%  தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 97  மாணவா்களில்  96 போ் தோ்ச்சிப் பெற்றனா்.  மாணவி நிரஞ்சனா 493,  மாணவா் முகமது இா்பான் 488   மாணவி பிரசிதா 487 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.

இவா்களை தமிழ்நாடு தனியாா் பள்ளித் தாளாளா்கள் சங்க நிறுவனா் தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா், நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, குமரப்பா அறக்கட்டளைச் செயலா் நபிஷாபேகம், பொருளாளா் அஸ்வின்கணபதி ஆகியோா் வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com