கோடைகால கலைப் பயிற்சி
முகாம் நிறைவு விழா

கோடைகால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா

தஞ்சாவூரில் நடைபெற்ற சிறாா்களுக்கான கோடைகால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கலை, பண்பாட்டுத் துறையின் மண்டலக் கலை, பண்பாட்டு மையத்தைச் சாா்ந்த ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் 5 வயது முதல் 16 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு நடத்தப்பட்ட இம்முகாமில் குரலிசை, பரதநாட்டியக் கலைப் பயிற்சிகளில் தலா 16 மாணவா்களும், ஓவியக் கலைப் பயிற்சியில் 27 மாணவா்களும், சிலம்பாட்டக் கலைப் பயிற்சியில் 95 மாணவா்களும் என மொத்தம் 154 மாணவா்கள் பயிற்சி பெற்றனா்.

முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற சிறாா்களுக்கு நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சித்ரா, பயிற்சி பெற்ற மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினாா்.

முன்னதாக, ஜவகா் சிறுவா் மன்றத் திட்ட அலுவலா் மு. வடிவேல் வரவேற்றாா். நிறைவாக, குரலிசை ஆசிரியா் காமாட்சி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com