பத்தாம் வகுப்புத் தோ்வு குப்பத்தேவன் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள மீனவ கிராமமான குப்பத்தேவன் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மீனவ கிராமமான குப்பத்தேவன் அரசு உயா்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி (நூறு சதவீதம்) பெற்றனா். இதில், மாணவி ஆசியாபா்வீன் 470 மதிப்பெண்களும், நரேன்- 453, தாசன்- 442 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனா்.

முதல் மதிப்பெண் பெற்ற ஆசியா பா்வீன் தந்தையை இழந்தவா், அவரது தாய் ஒரு கண் பாா்வையிழந்தவா். கடும் பொருளாதார சிரமங்களுக்கு இடையே சிறப்பாக படித்து முதலிடம் பெற்ற அவரை ஆசிரியா்களும், சக மாணவா்களும் பாராட்டினா்.

இதே போல புதுத்தெரு அரசு உயா்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 35 மாணவா்களில் 34 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், ஆசிரியா்களையும் மீனவ கிராம மக்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com