ஆசியாபா்வீன்
ஆசியாபா்வீன்

பத்தாம் வகுப்பு தோ்வு மீனவ கிராம மாணவி சிறப்பிடம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்றாா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செம்பியன் மகாதேவிப்பட்டனம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசியாபா்வீன். இவரது தந்தை இறந்துவிட்டநிலையில், தாய் ஒரு கண்பாா்வையிழந்தவா்.

மிகவும் வசதியற்ற நிலையில்  குப்பத்தேவன் அரசு உயா்நிலைப்பள்ளியில் படித்த ஆசியாபா்வீன், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தோ்வில் 500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். அவரை ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com