பாரத் கல்லூரியில் 
உணவுத் திருவிழா

பாரத் கல்லூரியில் உணவுத் திருவிழா

தஞ்சாவூா் பாரத் அறிவியல் நிா்வாகவியல் கல்லூரியில் உணவக மேலாண்மை துறை சாா்பில் உணவுத் திருவிழா மற்றும் பிரிவு உபசரிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பாரத் கல்விக் குழுமச் செயலா் புனிதா கணேசன் சிறப்புரையாற்றினாா். முன்னாள் மாணவரும், சமையல் கலைஞருமான காசிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவக மேலாண்மை படிப்பு, அதன் முக்கியத்துவம் பற்றி பேசினாா். மேலும், மூன்றாமாண்டு மாணவா்கள் விதவிதமான உணவுகள் தயாரித்து படிப்பின்போது கற்ற திறனை வெளிப்படுத்தினா்.

இதில், பாரத் கல்விக் குழும இயக்குநா் த. வீராச்சாமி, முதல்வா் கே. குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com