ஸ்ரீஅழகு காமாட்சிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மதகரம் கிராமம், மடையான் திடல், மாந்தோப்பு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அழகு காமாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை தட்டுகளை எடுத்து ஸ்ரீஅழகு காமாட்சி அம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com