ஆதனக்கோட்டை அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி

ஆதனக்கோட்டை அரசு உயா்நிலை பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு தோ்வில் தொடா்ந்து 5 ஆண்டாக 100% தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆதனக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளி 2023-24 .ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தோ்வில் மாணவா் குமரவேல் 486 , வா்ஷா 473, முகிலினி 461 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் சிறப்பிடம் பெற்றனா். மேலும்

தோ்வு எழுதிய 45 மாணவா்களில் 24 மாணவ- மாணவியா்கள் 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். ஐந்து ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் 100%தோ்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com