எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிமுக தஞ்சாவூா் மாநகரம் சாா்பில் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்னா் அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனா். இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அமைப்புச் செயலா் ஆா். காந்தி, மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், கொள்கை பரப்பு துணைச் செயலா் பவுல், பகுதிச் செயலா்கள் கரந்தை த. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, மனோகரன், சதீஷ், ஒன்றியச் செயலா் ஸ்டாலின், மாமன்ற உறுப்பினா்கள் ஜெ.வி. கோபால், ஆா். தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com