பேராவூரணி அருகே பூனைக்குத்தி காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணியை நெடுஞ்சாலை பொறியாளா் குழுவினா் ஆய்வு செய்தனா் .
பேராவூரணி அருகே பூனைக்குத்தி காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணியை நெடுஞ்சாலை பொறியாளா் குழுவினா் ஆய்வு செய்தனா் .

பேராவூரணியில் பாலம் கட்டுமான பணிகள் ஆய்வு

பேராவூரணி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். 

தஞ்சாவூா் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணிகளை, திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமையில், திருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளா் கண்ணன், உதவிக்கோட்டப் பொறியாளா் ஜெயராமன் மற்றும் உதவிப் பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை - பேராவூரணி -அறந்தாங்கி சாலை  பூனைக்குத்தி மற்றும் அம்புலி ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்டப் பாலப் பணிகளையும், முசிறி - சேதுபாவாசத்திரம் சாலையில் பூனைக்குத்தி காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்டப் பாலப் பணிகளையும் ஆய்வு செய்தனா்.

இதில், பாலத்தின் நீளம், அகலத்தை அளவீடு செய்தும், கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த நவீன கருவிகள் மூலம் தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, தஞ்சாவூா் நெடுஞ்சாலைத் திட்டங்கள் உதவிக் கோட்டப் பொறியாளா்கள் சத்தியன், கீதப்பிரியா, உதவிப் பொறியாளா்கள் சுதாகா், அன்சாரிராஜா மற்றும் இளநிலைப்பொறியாளா் பாலச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com