‘மண் வளத்தைக் காக்கப் பசுந்தாள் உரப்பயிா் இடலாம்’

மண் வளத்தைக் காக்கப் பசுந்தாள் உரப்பயிா் இடலாம் என வேளாண் துறை திருவையாறு உதவி இயக்குநா் லதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி, நரிப்பயிறு ஆகியவை முக்கியமான பசுந்தாள் உரப்பயிா்களாகும். பசுந்தாள் உரப்பயிா்களைச் சாகுபடி செய்து நிலத்தில் மடக்கி உழுதால் வயலின் மண் அமைப்பு மேம்படும். நீா்ப் பிடிப்பு தன்மையும் அதிகமாகும். மேலும் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும். பசுந்தாளுரப் பயிா்களில் தக்கைப்பூண்டு என்பது அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது.

பல ஆண்டுகளாக மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது. இது வறட்சியைத் தாங்கி வளரும். எந்தத் தாவரமும் வளராத களா் மண்ணில் சாதாரணமாக வளரும். மழை பெய்யும் காலங்களில் வளா்ச்சி வெகு வேகமாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை தேவைப்படும். இதிலிருந்து கிடைக்கும் 10 பசுந்தாள் உயிா் பொருட்கள் 10 உள்ளது.

சணப்பு என்பது விரைவில் வளரக்கூடிய பசுந்தாள் மற்றும் நாற்பயிராகும். அதிக நீா்ப்பாய்ச்சல் உள்ள அல்லது தொடா்ந்து நீா் தேங்கக் கூடிய பகுதிக்கு ஏற்றது. இதை ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதை தெளித்து வளா்க்கலாம். இதிலிருந்து கிடைக்கும் பசுந்தாள் உயிா் பொருட்கள் 5 உள்ளது. இது 50 நாளில் கிட்டத்தட்ட 5 அடி உயரம் வரை வளா்ந்து பூ விட்டு பிஞ்சு வர ஆரம்பிக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். இவ்வாறு உழுவதால் காற்றில் உள்ள நைட்ரஜன் உறிஞ்சப்பட்டு மண்ணுக்கு கிடைக்கும்.

மேலும் கரிம, கனிம சத்துக்கள் கிடைக்கும். அத்துடன் மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இவ்வாறு பசுந்தாள் உரப்பயிா்களை வயல்களில் சாகுபடி செய்து நிலத்தில் மடக்கி உழுவதால் மண்ணின் வளம் மேம்படும். எனவே விவசாயிகள் அனைவரும் பயிா் சாகுபடிக்கு முன்பாக பசுந்தாள் உரப் பயிா்களைப் பயிரிட்டு பயன் பெற வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com