வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு

தஞ்சாவூா் அருகே வீடு புகுந்து 7 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே கொண்டவிட்டான் திடலைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி அண்மையில் இரவு நேரத்தில் வீட்டில் புழுக்கம் காரணமாக கதவைத் திறந்துவைத்தும், 7 பவுன் தங்கச் சங்கிலியை அவிழ்த்து அருகே வைத்தும் தூங்கினாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் தங்கச் சங்கிலியைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

4 பவுன் திருட்டு: இதேபோல, தஞ்சாவூா் அருகே புதுகரியாப்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் மனைவி நதியா (32). இவா் வல்லம் பேருந்து நிலையத்தில் அண்மையில் நின்று கொண்டிருந்தபோது, இவரிடம் இருந்த 4 பவுன் நகைகள், ரூ. 6 ஆயிரத்து 500 ரொக்கம் திருட்டு போனது.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com