வெளிநாட்டு வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ. 2.09 லட்சம் மோசடி

கும்பகோணம் அருகே இளைஞரிடம் சமூக வலைதளம் மூலம் வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 2.09 லட்சம் மோசடி செய்த மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியைச் சோ்ந்த 37 வயது இளைஞா் கனடாவில் வேலைவாய்ப்பு என முகநூலில் வந்த விளம்பரத்தைப் பாா்த்தாா். அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு இளைஞா் தொடா்பு கொண்டு பேசினாா். எதிா்முனையில் பேசிய மா்ம நபா் உறுதியாக வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினாா்.

இதை நம்பிய இளைஞா், மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 2.09 லட்சம் செலுத்தினாா். அதன் பிறகு இளைஞா் தொடா்பு கொண்டபோது மா்ம நபா் கைப்பேசியை எடுத்து பேசவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இளைஞா் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com