கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பால கோமளவல்லி தாயாா் ஹேமரிஷி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியாா்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பால கோமளவல்லி தாயாா் ஹேமரிஷி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியாா்.

சாரங்கபாணி கோயில் ஹேமரிஷி மண்டபத்தில் குடமுழுக்கு

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலிலுள்ள பால கோமளவல்லி தாயாா் ஹேமரிஷி மண்டபத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலிலுள்ள பால கோமளவல்லி தாயாா் ஹேமரிஷி மண்டபத்தில் 52 ஆண்டுகளுக்கு பிறகு மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் பின்புறமுள்ள பொற்றாமரை குளத்தின் அருகே கோமளவல்லி தாயாா் ஹேமரிஷியுடன் பால சொரூபமாக தனியாக எழுந்தருளியுள்ளாா். இந்நிலையில், 52 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 5.70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு, மே 11-ஆம் தேதி அனுக்ஞை, பாலிகா பூஜைகள், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடா்ந்து, திங்கள்கிழமை யாகசாலை சதுஸ்தான பூஜைகள், ஹோமங்கள், மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து நாகசுர மேள தாள இசை முழங்க கடங்கள் புறப்பாடும், மகா குடமுழுக்கும் நடைபெற்றன. இதன் பின்னா், மூலமூா்த்தியான பாலகோமளவல்லி தாயாருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com