தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்து பயணம் - விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 14 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் கட்டணமில்லா பேருந்து பயணம் - விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 14 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலேயே அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்தத் திட்டத்தின் மூலம் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ. 888 வரை சேமிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில், 2021, ஜூலை மாதம் முதல் 2024, ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டல அரசு நகரப் பேருந்துகளில் 14 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 735 பெண்கள், 8 லட்சத்து 45 ஆயிரத்து 192 மாற்றத்திறனாளிகள், 37 ஆயிரத்து 315 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளா்கள், 68 ஆயிரத்து 186 திருநங்கைகள் என மொத்தம் 14 கோடியே 89 இலட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com