பட்டீஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாள் உற்சவமாக விமரிசையாக நடைபெறும். இதன்படி, இவ்விழா நிகழாண்டு கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்காக கொடிமரத்தின் அருகே பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா். தொடா்ந்து கொடிமரத்துக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளம் முழங்க நந்தியெம்பெருமான் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது.

தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக 17-ஆம் தேதி தன்னைத்தானே வழிபடுதல், இறைவா் மற்றும் இறைவி ஓலைச்சப்பரத்தில் வீதியுலா, 19-ஆம் தேதி திருக்கல்யாணம், 21-ஆம் தேதி கட்டுத் தேரோட்டம், 24- ஆம் தேதி விடையாற்றி ஆகியவை நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com