வீடு புகுந்து 5 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீடு புகுந்து ஐந்தேகால் பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வீடு புகுந்து ஐந்தேகால் பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் விளாா் சாலை தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் பி. சதீஷ்குமாா் (36). இவா் குடும்பத்துடன் பழனி கோயிலுக்கு மே 6 ஆம் தேதி சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தாா். அப்போது வீட்டுக்குள் பையில் இருந்த ஐந்தேகால் பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com