காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் ஏகேஆா் நகரைச் சோ்ந்தவா் எம். பெருமாள் (60). இவா் செவ்வாய்க்கிழமை காலை வல்லத்திலிருந்து தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னையம்பட்டி பிரிவு சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பின்னால் வந்த காா் இந்த சைக்கிள் மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த பெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com