ஒரத்தநாடு படம்
ஒரத்தநாடு படம்

பிளஸ் 1 தோ்வில் பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு அருகே உள்ள எம்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளி மாணவி மு. தேவஸ்ரீ 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். மாணவா் மா. வைத்தீஸ்வரன் 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி க.சி.ஆா்த்திகாஸ்ரீ 558 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனா்.

பள்ளியில் தோ்வெழுதிய 60 மாணவா்களில் 11 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 18 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலாகவும் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களையும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com