மோட்டாா் சைக்கிளிலிருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

கும்பகோணத்தில் மோட்டாா் சைக்கிள் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் மேலக்காவேரி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏ. ஜான் எட்மான் (45). இவா் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை ஜான் செல்வராஜ் நகரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் ரொக்கத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்தின் முன்புற டேங்க் கவரில் வைத்தாா்.

பின்னா், அதே பகுயிலுள்ள ஏடிஎம்-லிருந்து ரூ. 1,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து பாா்த்த அவா் டேங்க் கவரில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com