தஞ்சாவூரில் கோடை மழை

தஞ்சாவூா், மே 15: தஞ்சாவூா் மாநகரில் புதன்கிழமை மாலை பரவலாக கோடை மழை பெய்தது.

மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதேபோல, தஞ்சாவூரில் புதன்கிழமை பகலில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், தஞ்சாவூா், திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலையில் பரவலாக மழை பெய்தது. இதன் மூலம் பகலில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ந்த நிலை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com