தரமற்ற உணவுப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

பட்டுக்கோட்டை நகா் பகுதிகளில்

தரமற்ற உணவுப் பொருள்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை நகா்ப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், விற்பனை நிலையங்கள், உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்களில் கலப்படங்கள் உள்ளதா என வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின்போது நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூடம் மூலம் கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் 5 உணவு மாதிரிகள் கலப்படம் மற்றும் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து, தரம் குறைவான உணவை விற்பனை செய்த உணவகத்துக்கு ரூ. 3 ஆயிரம், தடை செய்யப்பட்ட நெகிழிப் பை பயன்படுத்திய ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் மேலும் கூறுகையில், ‘இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூடம் ஒவ்வொரு பகுதிக்கும் மாதம் இரண்டு முறை வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இனிவரும் காலங்களில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com