நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா், மே 15: தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இதில், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது செங்கமலத்தாயாா் உடனாய நீலமேகப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

தொடா்ந்து வியாழக்கிழமை (மே 16) முதல் 22 ஆம் தேதி வரை பெருமாள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. பின்னா், 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேரோட்டம், 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் தீா்த்தவாரி நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com