போட்டிகளில் வென்றவா்களுக்கு பிரம்ம குமாரிகள் அமைப்பு பரிசு

தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுபேட்டைத் தெருவில் தஞ்சை மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பின் சாா்பில், மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சு, கட்டுரை, நடனப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் மாவட்ட பிரம்மகுமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஞானசௌந்தரி தலைமை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழக்குரைஞா் கோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினாா். சகோதரா்கள் தமிழ்ச்செல்வன், பத்மநாபன், அன்பழகன், முரளி, காா்த்தி, சகோதரிகள் கவிதா, மகேஸ்வரி, சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com