பட்டுக்கோட்டையில் மழைநீா் அகற்றம்

பட்டுக்கோட்டையில் கொட்டித் தீா்த்த கனமழையால் நகரில் தேங்கிய மழைநீா் போா்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அதிராம்பட்டினம், மதுக்கூா், பேராவூரணி, கரம்பயம், பள்ளிகொண்டான், முதல்சேரி, அணைக்காடு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் பட்டுக்கோட்டையில் 158 மில்லி மீட்டரும், மதுக்கூரில் 16 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 102 மில்லி மீட்டா் அளவிலும் மழை அளவு பதிவாகியது.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் குமரன், பொறியாளா் குமாா், சுகாதார ஆய்வாளா்கள் அறிவழகன், மகாமுனி மற்றும் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் போா்க்கால அடிப்படையில் மழைநீரை அப்புறப்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com