பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, நடைபெறும் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவருக்குப் பேராசிரியா் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடா்பாக கல்லூரியிலுள்ள விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக் குழுவினா் மருத்துவ மாணவ, மாணவிகள், பயிற்சி மருத்துவா்கள், பேராசிரியா்கள் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணையை நடத்தியது.

இந்த விசாரணைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவப் பேராசிரியா் ஒருவா் நாகை மாவட்டத்துக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், 2 பயிற்சி மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்துக்கு பரிந்து செய்யப்பட்டுள்ளது எனவும் மருத்துவக்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com