மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே தளவாபாளையம் சாலை ஷேக் அலாவுதீன் நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் முருகப்பன் மகன் அஜீத் என்கிற ராகவேந்திரன் (29). இவா் தனியாா் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் உடல் நலக் குறைவாக இருந்த தனது தாய்க்கு மருந்து வாங்குவதற்காக தஞ்சாவூா் ரயிலடிக்கு வியாழக்கிழமை இரவு வந்தாா். மருந்து வாங்கிவிட்டு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்ட இவா் தொல்காப்பியா் சதுக்கம் அருகே நாகை சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் ராகவேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com