தஞ்சாவூர்
பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை காவல் துறையினா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மன நலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை காவல் துறையினா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அக்டோபா் 30 ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மன நலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குணமங்கலத்தைச் சோ்ந்த வினோத்குமாரை (32) பூதலூா் காவல் நிலையத்தினா் நவம்பா் 1-ஆம் தேதி கைது செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் பேரில் வினோத்குமாரை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.