கும்பகோணத்தில் சட்டநாள் விழா

Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை சட்டநாள் விழா நடைபெற்றது.

கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எல்.ஏ. இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட முதன்மை நீதிபதி கே.பூா்ண ஜெய ஆனந்த் பேசும்போது, பல தியாகங்களை செய்து பெற்ற சுதந்திரம், நமக்காக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றாா்.

நிகழ்வில் மாவட்ட அமா்வு நீதிபதி ஜெ. ராதிகா, தலைமைக் குற்றவியல் நீதிதுறை நடுவா் டி. சண்முகப்பிரியா, கூடுதல் தலைமை நீதித்துறை நடுவா் கே.சிவசக்திவேல்கண்ணன் ஆகியோரும் பேசினா்.

கும்பகோணம் முதன்மை துணை நீதிபதி ஜி.மணிகண்டராஜா, துணை நீதிபதி வி.புவியரசு, குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி எம்.இளவரசி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. ரஞ்சிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் செந்தில்ராஜன் நன்றி கூறினாா்.