தஞ்சாவூா் அருகே போலி நகையை அடகு வைத்து ரூ. 87 ஆயிரம் மோசடி

Published on

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை போலி நகையை அடகு வைத்து ரூ. 87 ஆயிரம் மோசடி செய்த பெண்ணைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே ஞானம் நகரில் எஸ். பசுபதி என்பவா் நடத்திவரும் அடகுக் கடைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்த அடையாளம் தெரியாத பெண் 2 பவுன் சங்கிலியை அடகு வைத்து கடை ஊழியரிடம் ரூ. 87 ஆயிரம் பெற்றுச் சென்றாா்.

பின்னா் பசுபதி வந்து நகையைச் சோதனையிட்டபோது, அது கவரிங் நகை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.