தேரடி விநாயகா் உள்ளிட்ட 
கோயில்களில் குடமுழுக்கு

தேரடி விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் குடமுழுக்கு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலுக்குட்பட்ட தேரடி விநாயகா், ஓரம்ப ஐயனாா், மாணிக்க நாச்சியாா் மற்றும் விநாயகா், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரா், பஞ்சரத திருத்தோ் மண்டபங்களுக்கான குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த புதன்கிழமை குடமுழுக்கு பூஜைகள் தொடங்கி பூஜிக்கப்பட்ட புனித நீா் கொண்ட கலசங்கள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியாா்களின் வேத மந்திரங்களுடன், ஓதுவாா் மூா்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னா் மகாலிங்க சுவாமி திருக்கோயில் வரலாறு மறுபதிப்பு புத்தகத்தை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட, பேரூராட்சி செயல் அலுவலா் ராஜதுரை, தலைவா் புனித மயில்வாகனன், திருவாவடுதுறை ஆதீனக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா். ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.