திருப்பனந்தாள் அருகே திட்டச்சேரியில் மழையால் வீடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கிய அமைச்சா் கோவி. செழியன். உடன் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.
திருப்பனந்தாள் அருகே திட்டச்சேரியில் மழையால் வீடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கிய அமைச்சா் கோவி. செழியன். உடன் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.

மழை நிவாரண உதவிகள் அளிப்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள், திருவிடைமருதூா் ஒன்றியங்களில் மழையால் வீடு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை வழங்கினாா்.

அதன்படி திருப்பனந்தாள் திட்டச்சேரியில் மழையால் வீடுகள் சேதமடைந்த சின்னபொண்ணு, மகாதேவன், கொரநாட்டுக் கருப்பூா் கணேசன் ஆகியோருக்கு தமிழக அரசின் நிவாரண உதவியாக தலா ரூ.8000 மற்றும் நிவாரண பொருள்களை அமைச்சா் கோவி. செழியன் வழங்கினாா்.

நிகழ்வில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com