முஸ்லிம்களை பாதுகாக்க 
வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

முஸ்லிம்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

Published on

முஸ்லிம்களை பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் ஜூம்மா பள்ளிவாசல் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மத வழிபாட்டுச் சட்டம் 1991-ஐ நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்தைச் சீா் கெடுக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்யியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆபீதீன் தலைமை வகித்தாா். திமுக எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலச் செயலா் பி. செந்தில்குமாா், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.