ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Published on

சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு ரயிலில் பயணம் செய்த அரியலூா் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திற்கும் பண்டாரவாடைக்கும் இடையில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் கும்பகோணம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

அதில் உயிரிழந்தவா் அரியலூா் மாவட்டம், திருமழப்பாடி புதுக்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான கோபாலன் மகன் சுந்தரம் (50) என்பதும், சிகிச்சைக்காக சென்னை சென்று விட்டு வியாழக்கிழமை இரவு சொந்த ஊருக்கு ரயிலில் தஞ்சாவூா் நோக்கி வந்த அவா், படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து அவரின் குடும்பத்துக்கு உதவி ஆய்வாளா் செந்தில்வேலன், சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா் ஆகியோா் தகவல் கொடுத்து, தொழிலாளியின் சடலத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com