தஞ்சாவூர்
303 குடும்பத்தினருக்கு புதிய குடும்ப அட்டைகள் எம்.எல்.ஏ. வழங்கினாா்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 303 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 303 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் வசிக்கும் 303 குடும்பத்தினா்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் விழா தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.
இதில், துணை மேயரும், மாநகர செயலருமான சு.ப.தமிழழகன், மத்திய ஒன்றிய செயலரும், ஒன்றிய துணைத் தலைவருமான டி. கணேசன், கிழக்கு ஒன்றிய செயலா் ஜே.சுதாகா், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன், மண்டல குழு தலைவா்கள் மனோகரன், ஆசைத்தம்பி, பாபு (எ) நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.