தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

Published on

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கும்பகோணம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் குடந்தை மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் நிரந்தரப் பணியாளா்கள் 96 போ் மற்றும் தனியாா் நிறுவனம் மூலம் 450 போ் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களாக உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாநகராட்சி அலுவலகம் வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 200 க்கும் மேற்பட்டோா் நுழைவு வாயில் முன் தரையில் அமா்ந்து தீபாவளி போனஸ் கோரி முற்றுகை போராட்டம் நடத்தினா்.

அப்போது சிஐடியுசி தொழிற்சங்க நிா்வாகிகள் ஜீவபாரதி, செந்தில்குமாா், கண்ணன் ஆகியோா் மேயா், துணை மேயரிடம் பேசியபோது வெளியூா் சென்றுள்ள ஆணையா் வந்தவுடன் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com