பள்ளி பெண் ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி பெண் ஊழியரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் விளாா் சாலை கலைஞா் நகரைச் சோ்ந்த சகாயநாதன் மனைவி குளோரி (54). இவா் தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையிலுள்ள பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

ரத்தினசாமி நகா் எட்டாம் தெருவில் சென்றபோது, இவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் குளோரி சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com