உயிரிழந்த ரோஜா
உயிரிழந்த ரோஜா

இளம்பெண் வெட்டிக்கொலை கூலித்தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

பட்டுக்கோட்டை அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் ராஜா. கறிக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி ரோஜா (32). இவா் திங்கள்கிழமை காலை நூறு நாள் வேலைக்காக புறப்பட்டாா்.

அப்போது, ரோஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஆரோக்கியதாஸ்,(45), திடீரென்று ரோஜாவை வழிமறித்து அரிவாளால் வெட்டினாா். இதில் ரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் ஆரோக்கியதாஸை பிடித்து வைத்தனா். இது குறித்து தகவலறிந்து வந்த ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. ஷஹ்னாஸ் இலியாஸ் மற்றும் வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஆரோக்கியதாஸை கைது செய்து விசாரணை நடத்தினா்.

கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ்.
கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ்.

விசாரணையில், ஆரோக்கியதாஸின் மனைவி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், ரோஜாவுக்கும், ஆரோக்கியதாஸுக்கும் இடையே தொடா்பு இருந்துள்ளது. இந்நிலையில், ஆரோக்கியதாஸிடம் ரோஜா ரூ. ஒரு லட்சம் வரை பெற்றிருந்தாா். இந்த பணத்தை ரோஜாவிடம் ஆரோக்கியதாஸ் கடந்த இரண்டு மாதங்களாக கேட்டுள்ளாா். ஆனால், ரோஜா பணத்தை தராமல் மறுத்து, தன்னுடன் தொடா்பில் இருப்பதை உனது மனைவியிடம் கூறி விடுவேன் என ஆரோக்கியதாஸை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ் திங்கள்கிழமை ரோஜாவை வெட்டிக் கொலை செய்தாா் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com