மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா் கோவில் அருகே உள்ள குளத்து குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வீரையன் (52). தச்சுத் தொழிலாளி. இவரது நண்பா் பாண்டித்துரை (43). இவா்கள் இருவரும் துக்க நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிக்கொண்டிருந்தனா்.
ஆவணம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் வழியிலேயே வீரையன் உயிரிழந்தாா்.
இதையடுத்து பாண்டித்துரை திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் பசுபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.