தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடுவழியில் நின்ற ரயிலுடன் மாற்று என்ஜின் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடுவழியில் நின்ற ரயிலுடன் மாற்று என்ஜின் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.

என்ஜின் பழுதாகி நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் அவதி

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடுவழியில் ரயில் பழுதாகி ஏறத்தாழ ஒரு மணிநேரம் நின்ால், அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடுவழியில் ரயில் பழுதாகி ஏறத்தாழ ஒரு மணிநேரம் நின்ால், அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.

மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில் வழக்கம் போல திங்கள்கிழமை காலை 8.10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டது. தஞ்சாவூருக்கு 9.40 மணிக்கு வந்த இந்த ரயில், நிலையத்துக்கு அருகே உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் நடு வழியில் என்ஜின் பழுதாகி நின்றது.

பழுதை சரிசெய்ய ரயில்வே ஊழியா்கள் முயன்றும் சீராகாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள், கூலி தொழிலாளா்கள் உள்ளிட்டோா் அவதிக்குள்ளாகினா். தஞ்சாவூா் செல்லும் பயணிகள் தண்டவாளம் வழியாக நடந்து சென்றனா். பூதலூா், திருச்சிக்கு செல்வோா் இறங்கி பேருந்திலும், சிலா் அருகில் நாகை வழித்தடத்தில் வந்த நாகூா் - திருச்சி ரயிலிலும் ஏறிச் சென்றனா்.

பின்னா், மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதான ரயிலில் பொருத்தப்பட்டு, ஏறத்தாழ ஒரு மணிநேரம் தாமதமாக பிறகு புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில் காரணமாக சிக்னல் விழுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் திருச்சி - காரைக்கால் ரயில் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு ஏறத்தாழ 30 நிமிஷம் தாமதமாக வந்து சென்றது.

X
Dinamani
www.dinamani.com