கும்பகோணம் அருகே விநாயகா் சிலை உடைப்பு: போலீஸில் புகாா்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பெருமாண்டியில் விநாயகா் சிலையை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பெருமாண்டியில் விநாயகா் சிலையை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி ஊராட்சி கணபதி நகா் முதல் தெருவில் விநாயகா் கோயில் உள்ளது. இங்குள்ள கல்லால் ஆன விநாயகா் சிலையின் கைப் பகுதியை மா்மநபா்கள் ஞாயிற்றுக்கிழமை உடைத்து சேதபடுத்தினா்.

இதைகண்ட கோயில் நிா்வாகி கே.ஜி.சதீஷ்குமாா் தாலுகா காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி சம்பவ இடத்தை பாா்வையிட்டு, சிலையை உடைத்தவா்கள் யாா் என்று விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com