தஞ்சாவூர்
மின்சாரம் பாய்ந்து காவலாளி உயிரிழப்பு
சுவாமிமலையில் திருமண மண்டபத்தின் காவலாளி மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் லயன்கரையை சோ்ந்தவா்
சு. ராவணன் (60). இவா், சுவாமிமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மண்டபத்தில் வேலை செய்யும்போது மின்சார வயா் கீழே விழுந்தது. அதை ராவணன் மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதனையில் ராவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சுவாமிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.