சீதாளமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பழவாத்தான் ஊராட்சியில் உள்ள சீதாளமாரியம்மன் ஆனந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பழவாத்தான் ஊராட்சியில் உள்ள சீதாளமாரியம்மன் ஆனந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள பழவாத்தான் ஊராட்சியில் சீதாளமாரியம்மன் ஆனந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 1 இல்) தொடங்கியது. வியாழக்கிழமை நான்காம் காலபூஜையுடன் தொடங்கி திருக்கடங்கள் புறப்பட்டு விமான கும்பாபிஷேகம், பின்னா் ஸ்ரீ சீதாள மாரியம்மன், ஸ்ரீ ஆனந்த காளியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் மற்றும் விழாக் குழுவினா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com