பாபநாசத்தில்: தெற்கு ஒன்றிய, பாபநாசம் நகர திமுக அலுவலகத்திலிருந்து தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலாளா் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் ஊா்வலமாக சென்ற திமுகவினா் பாபநாசம் மேலவீதியில் அமைந்துள்ள அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஒன்றியச் செயலாளா்கள் என். நாசா், கோ. தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அய்யம்பேட்டையில்: நகர திமுக செயலாளா் வழக்குரைஞா் டி.பி.டி. துளசிஅய்யா தலைமையில் திமுகவினா், அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.